Friday, March 6, 2009

தேர்தல் களத்தில் 'டெ.....ர்......ர......ர் காமெடியன்கள்' மூன்று பேர்: பயங்கர கொலைவெறி பிரச்சாரம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மத்தியிலிருந்து மாநிலங்கள் வரை உள்ள எல்லாக் கட்சிகளும் தத்தம் தேர்தல் பணிகளில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன. அதிலும் மத்தியில் காங்கிரளூம், பி.ஜே.பியும் பலமான காட்சிகளாகவும் இவை இரண்டுமே குதிரைவேகத்தில் களத்தில் காய்களை நகர்த்தும் வேகத்தில், நமது தமிழ் நாட்டிலும் அதிமுக , திமுக இந்த இரண்டு கட்சிகளுமே பலமான கட்சிகள் என்பதால் தமது கட்சியை பலப்படுத்துவதுடன் தமது கூட்டனிக் கட்சிகளையும் தக்க வைத்துக் கொள்வதிலும், எதிர்க்கட்சியின் கூட்டனிக் கட்சிகளை தமது பக்கம் இழுப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

தேர்தலில் ஜெயிப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பதும் நடைமுறை படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள வேளையில். பிரச்சாரம் செய்ய திறமையுள்ளவர்களை பயன் படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த டாப் லெவல் கட்சிகளின் பார்வை சினிமா பக்கம்தான் அதிகமாக உள்ளன. சினிமா நடிகர்கள் என்றால் தான் கூட்டம் கூடும் என்பதால். இந்த தேர்தலில் நடிகர் நடிகைகளை தம் பக்கம் இலுப்பதிலும், விலைக்கு வாங்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றன.அதிலும் கட்சிகள் காமெடி நடிகர்களை களம் இறக்கி விசித்திரமான முறையில் ஓட்டுகளை அள்ள திட்டமிட்டுள்ளதாக தகவால்கள் தெரிவிக்கின்றன.தற்போதைய ட்ரெண்ட்-க்கு ஏற்ற நகைச்சுவை நடிகர்களும் களம் இறங்க கொலைவெறி ஆர்வத்துடன் இருப்பதாக தெரிய வருகிறது.அதிரடியாக களம் இறங்கும் நடிகர்கள்.

1) டெர்..............ர.......................ர் காமெடியன் ரித்தீஷ்
2) பயங்கரமான காமெடியன் T.ராஜேந்திரன்
3) கொலைவெறி காமெடியன் சுந்தர்.C

டெர்..............ர.......................ர் காமெடியன் ரித்தீஷ்:
தாவது நாயகன் படத்தின் மூலம் உலகம் முழுவதும் டெர்...ர...ர் காமெடியன் என உலா வரும் ரித்தீஷை களத்துல் இறக்க தீர்மானித்துள்ளன. அவருக்கு தேர்தல் புதிதல்ல.ஆனால் அவர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான கெட்டப்பில், பல விசித்திர தோற்றங்களில் கலக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரித்தீஷ் தினம் ஒரு தொகுதி என பிரச்சாரம் செய்வார். அவர் ஒவ்வோரு ஊர்களுக்குச் செல்லும் போதும் விதவிதமான கோமாளி ஆடைகளை அனிந்து 'நாயகன்' படத்தில் உள்ள சில காமெடிகளை மேடையில் நடித்துக் காட்டி வாக்காளர்களை சிரிக்க வைப்பது தான் அவருடை இந்த தேர்தல் பிரச்சார டெக்னிக்.

இலவச பிரியானி சாப்பிட்டுகொண்டு இந்த நகைச்சுவகளைப் பார்த்து மக்கள் மெய்மறந்து சிரிக்க வைத்து ஓட்டுக்களை அள்ளுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு காமெடியையும் பொறுமையாக் உட்கார்ந்து, பயந்து ஓடாமல் பார்ப்பவர்களுக்கு தலைக்கு 50/= என ரூபாய் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் ரித்தீஷ். கடைசிவரை அனைத்து காமெடிகளையும் பார்ப்பவர்களுக்கு சிறப்புப் பருசுகள் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பயங்கரமான காமெடியன் T.ராஜேந்திரன்:
வரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல தேர்தலில் பிரச்சாரம் பன்னிய அனுபவம் உண்டு. இவர் அதே பானியைத் தான் இந்த தேர்தலிலும் கடைப் பிடிப்பார் என தெரிகிறது. இதுவரை நடந்த தேர்தலில் இவருடைய பிரச்சாரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கில் தான் மக்கள் ஹார்ட் அட்டக்கில் இறந்துள்ளனர். பாதி பேர் தெற்க்கு ஆப்பிரிக்கா காடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அதனால் இவரை விலைக்கு வாங்கி பிரச்சாரத்துக்கு பயண்டுத்த பல கட்சிகள் போட்டி போடுகின்றன , இவரது பிரச்சாரத்தின் ட்ரெண்டை இந்த தேர்தலில் கொடூரமாக இருக்கும் என் தெரியவருகின்றது. அதாவது இவர் இது வரை தமது ஆதரவு உள்ள கட்சி மேடைகளிலேயே முழங்கி வந்தார். ஆனால் இந்த் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவு அதிகமாக உள்ள தொகுதிகளுகு சென்று எதிக்கட்சியினரின் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக சென்று வீட்டு முன்நின்று காட்டுக் கத்து கத்துவார்.

தனால் பலவீனம் ஆனாவர்கள் கரடி வீட்டுக்குள் வந்து விட்டதாக நினைத்து ஹார் அட்டாக்கில் போய் சேர்ந்து விடுவார்கள். மற்றவர்கள் காடு, மலை என ஓட்டம் பிடித்து விடுவார்கள். இதனால் எதிர் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை கனிசமான முறையில் குறைத்து, ஆதரவு கட்சியை ஜெயிக்க வைப்பது தான் இவரது இந்த தேர்தல் ட்ரெண்ட்.இவரைப் பயன் படுத்தும் கட்சிக்கே வெற்றி அதிகமாக இருக்கும் என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவர் தேர்தல் நடைபெறும் பூத்துக்கு சென்று காட்டுக் கத்து கத்துவார். இதனால் கரடியைப்பார்த்து தேர்தல் அதிகாரிகள், மக்கள் என எல்லோரும் ஓடிவிட ஆதரவு அணி கள்ள ஓட்டுக்களை போட்டு எளிதாக் ஜெயித்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கொலைவெறி காமெடியன் சுந்தர்.C :
பு
திதாக முளைத்துள்ள காமெடியன் சுந்தர்.C . இவருக்கு இதுவே முதல் தேர்தல் என்பதால் இவரும் புதிய நுனுக்கத்துடன் தேர்தல் களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளார். இவரைப் பயன்படுத்தும் கட்சி. இவர் 'தீ' படத்தில் ஆக்ட் பன்னிய அனைத்து காமெடிகளையும் (A to Z படம் முழுவதும்) "மூன்றாம் பிறை" கமல் நடிப்பில் வெளிப்படுத்த உள்ளார். இவருடைய பிரச்சாரம் ரித்தீஷ் and T.ராஜேந்திரன் மிக்ஸ் பன்னி இருக்கும் இதனால் சில நேரங்களில் டெ...........ர்.................ர................ர் ஆகவும், சிலநேரங்களில் பயங்கரமான காட்டு........... கா..................மெ.........டியனாகவும். குட்டப் மாறி மாறி, ஒட்டப்பிலும் வந்து காமெடி பன்னி ஆதரவைப் பெறுவது தான் இந்தக் கட்சியின் வேலை. ஒட்டப்பில் வரும் போது பெண்களின் ஓட்டை அள்ளி விடலாம் என நினைக்கிறார்.

வர் தன்னுடன் கூட வந்த ஆதரவு கட்சி வேட்பாளர்களையே சில நேரங்களில் தற்கொலை செய்ய வைக்கும் அளவிற்கு பிரச்சாரம் பன்னுவார் என எதிர்பார்ப்பதால். ஆதரவு கட்சி வேட்பாளர்களே இவர் மேல் கொலைவெறி பயத்தில் உள்ளனர். சில நேரங்களில் ரித்தீஷ் and T.ராஜேந்திரன் கலவையாக ஒரு சிரிப்பு சிரிப்பார். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

(இது யாரையும் புண் படுத்துவதற்க்காக எழுத்தப்பட்டவை அல்ல, சிரித்து மகிழ எழுத்தப்பட்டவை)

Monday, March 2, 2009

Sunday, March 1, 2009

கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!

கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். மறக்க முடியுமா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கொள்கைநல்லூர் முத்துக்குமாரை. ஆனால் நடப்பது என்ன. மறந்து விட்டோமே அந்த வீர தமிழ் வாலிபனை. அவன் எடுத்த தவறான அணுகுமுறையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், யாருக்காக அவன் தன் உயிரைத் துறந்தான், தமிழருக்காக, ந்மக்காக. பாதிக்கப்பட்டது அவனது குடும்பம். வாழவேண்டிய வயதிலே ஈழத்தமிழர்களுக்கு விடிவு பிறக்காதா? என ஏங்கி தன் மறைவின் மூலமாது ஆங்காங்கே சிதறக்கிடக்கிற தமிழ் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து போராடி ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கட்டும் என்று தானே உயிர் நீத்தான்.

இன்று நடப்பது என்ன? அவனது இறப்பையே அரசியல் ஆக்கி பணம் சம்பாதித்தார்கள் பல தலைவர்கள். முதலைக்கண்ணீர் வடிக்க மட்டும் தவறவில்லை, தமிழுக்காக எதுவேண்டுமென்றாலும் செய்வேன். தமிழருக்காக் உயிரைக்கூட குடுப்பேன் என்று சொன்ன தலைவர்கள் எல்லாம் ஏ.சி அறையில் உல்லாசமாக வாழ்கிறார்கள்.மேடைப்பேச்சிலே மப்பில் இருப்பதுபோல் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசும் தலைவர்கள் ஆட்சியில் இருந்தும் என்ன செய்தார்காள். பினந்தின்னி கழுகுகழாக மாறி சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழன் ரத்தத்தில் குளிர் காய்கிறது. அதை வேடிக்கைதானெ பார்க்கிறார்கள்.அதிகமாகப் போனான் தேர்தல் அறிக்கை போல் சில அறிக்கைகளை அள்ளி வீசுவார்கள். அறிக்கை வீசும் அந்த ஒவ்வொரு வினாடிய்ம் பல தமிழர்கள் கொல்லப் ப்டுகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை.

தினமும் பல நூறு என் உறவுகள் மடிந்து கொண்டு இருக்கிறது.தமிழர்களின் அழிவிற்க்கு சிங்கள ராணுவம் மட்டும் அல்ல. அவர்களைக் கேடயமாக பயன்படுத்தும் புலிகளும் தான் காரணம்.தவறைத் தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு சிங்கள பத்திரிக்கையாளர்களாக இருந்தபோதிலும் 'வெள்ளை வேன்' முறையில் கடத்திச்செண்று கொலை செய்கிறது. சிங்களப் பத்திரிக்கைத் துறைக்கே இந்த நிலமையென்றால். தமிழ் பத்திரிக்கையை சொல்லவே வேண்டாம். தமிழர்களாக நாம் இருந்தும் நம்மால் முடியவில்லையே என்றென்னும் போதெல்லாம் என் இரத்தம் கொதிக்கிறது. கோழைகளாக வாழ்ந்த நம்மை நம் வீரத்தை வெள்ளையர்களுக்கு காண்பித்த சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த மண்ணில் பிறந்து , நமது இன அழிவுக்கெ நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே??????????

பிஞ்சுக் குழந்தை கருவறையை விட்டு வெளியே வருமுன்னே கல்லறைக்கு போகிறததே இந்தக்கொடுமை எங்காவது நடந்த துண்டா? ஈழ மண்ணில் ஐ. நா தடை விதித்த கிளஸ்டர் குண்டுகளெல்லாம் தமிழினத்தை சுடுகாடு போக முன்னோயே எரித்து சாம்பல் ஆக்குகிறதே. இதையெல்லாம் பார்க்கும் போது. சுகந்திரமும் தேவையில்லை அரசாங்கமும் தேவையில்லை. மன்னர் ஆட்சியே போதும் என்றெல்லவா தோன்றுகிறது.