Sunday, March 1, 2009

கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!

கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். மறக்க முடியுமா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கொள்கைநல்லூர் முத்துக்குமாரை. ஆனால் நடப்பது என்ன. மறந்து விட்டோமே அந்த வீர தமிழ் வாலிபனை. அவன் எடுத்த தவறான அணுகுமுறையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், யாருக்காக அவன் தன் உயிரைத் துறந்தான், தமிழருக்காக, ந்மக்காக. பாதிக்கப்பட்டது அவனது குடும்பம். வாழவேண்டிய வயதிலே ஈழத்தமிழர்களுக்கு விடிவு பிறக்காதா? என ஏங்கி தன் மறைவின் மூலமாது ஆங்காங்கே சிதறக்கிடக்கிற தமிழ் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து போராடி ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கட்டும் என்று தானே உயிர் நீத்தான்.

இன்று நடப்பது என்ன? அவனது இறப்பையே அரசியல் ஆக்கி பணம் சம்பாதித்தார்கள் பல தலைவர்கள். முதலைக்கண்ணீர் வடிக்க மட்டும் தவறவில்லை, தமிழுக்காக எதுவேண்டுமென்றாலும் செய்வேன். தமிழருக்காக் உயிரைக்கூட குடுப்பேன் என்று சொன்ன தலைவர்கள் எல்லாம் ஏ.சி அறையில் உல்லாசமாக வாழ்கிறார்கள்.மேடைப்பேச்சிலே மப்பில் இருப்பதுபோல் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசும் தலைவர்கள் ஆட்சியில் இருந்தும் என்ன செய்தார்காள். பினந்தின்னி கழுகுகழாக மாறி சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழன் ரத்தத்தில் குளிர் காய்கிறது. அதை வேடிக்கைதானெ பார்க்கிறார்கள்.அதிகமாகப் போனான் தேர்தல் அறிக்கை போல் சில அறிக்கைகளை அள்ளி வீசுவார்கள். அறிக்கை வீசும் அந்த ஒவ்வொரு வினாடிய்ம் பல தமிழர்கள் கொல்லப் ப்டுகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை.

தினமும் பல நூறு என் உறவுகள் மடிந்து கொண்டு இருக்கிறது.தமிழர்களின் அழிவிற்க்கு சிங்கள ராணுவம் மட்டும் அல்ல. அவர்களைக் கேடயமாக பயன்படுத்தும் புலிகளும் தான் காரணம்.தவறைத் தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு சிங்கள பத்திரிக்கையாளர்களாக இருந்தபோதிலும் 'வெள்ளை வேன்' முறையில் கடத்திச்செண்று கொலை செய்கிறது. சிங்களப் பத்திரிக்கைத் துறைக்கே இந்த நிலமையென்றால். தமிழ் பத்திரிக்கையை சொல்லவே வேண்டாம். தமிழர்களாக நாம் இருந்தும் நம்மால் முடியவில்லையே என்றென்னும் போதெல்லாம் என் இரத்தம் கொதிக்கிறது. கோழைகளாக வாழ்ந்த நம்மை நம் வீரத்தை வெள்ளையர்களுக்கு காண்பித்த சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த மண்ணில் பிறந்து , நமது இன அழிவுக்கெ நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே??????????

பிஞ்சுக் குழந்தை கருவறையை விட்டு வெளியே வருமுன்னே கல்லறைக்கு போகிறததே இந்தக்கொடுமை எங்காவது நடந்த துண்டா? ஈழ மண்ணில் ஐ. நா தடை விதித்த கிளஸ்டர் குண்டுகளெல்லாம் தமிழினத்தை சுடுகாடு போக முன்னோயே எரித்து சாம்பல் ஆக்குகிறதே. இதையெல்லாம் பார்க்கும் போது. சுகந்திரமும் தேவையில்லை அரசாங்கமும் தேவையில்லை. மன்னர் ஆட்சியே போதும் என்றெல்லவா தோன்றுகிறது.