Tuesday, May 19, 2009

கொல்லப்பட்டது புலித் தலைவர் பிரபாகரன் தான்!

இலங்கை ராணுவமும், அரசாங்கமும் நேற்று புலித் தலைவர் பிரபாகரனின் பிணத்தை நந்திக் கடலில் எடுத்ததாக கூறி பிணத்தை காண்பித்தனர். ஆனால், ஈழத்தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களில் பல பேர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் அவருடைய சாயலில் உள்ள வேறு ஒருவருடையை பிணத்தை இலங்கை அரசு பயன் படுத்துகிறது என்றும், அவர்கள் அவ்வாறு பயன் படுத்துவதற்கு காரணம் பிரபாகரன் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதற்காக என்று கூறுகிறார்கள்

பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூட பிரபாகரன் சாகவில்லை என்று அடித்துக் கூறினார். இவர்கள் அனவரும் நம்புவதாலோ, கூறுவதினாலோ உணமை மறைக்கப் பட்டு விடாது என்பது என் கருத்து. இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல.

தமிழ் உணர்வு கொண்ட தமிழன் தான். அவர் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் ஆதாரத்துடன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ,பிரபாகரன் இறந்தற்கான காரணங்கள் பல உண்டு.

1) பிரபாகரன் பிணத்தை முன்னால் பிரபாகரனின் தளபதியும், 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்தவருமாண கருணா அம்மான் அவர்களே உறிதிப் படுத்தியுள்ளார்.(நாம் போட்டோக்களிலும், வீடியோக்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்)

2) ஆரம்ப காலங்களில் பிரபாகரனின் தோழரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி படுத்தியுள்ளார்.

3) இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசங்காமோ போலித்தனமாக உலகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இறக்கவில்லை என்றால் இருப்பிடத்தை சொல்லாமல் பிரபாகரன் வீடியோ பேட்டி கொடுக்கலாம்.

4) புலிகளின் செய்தித் தொடர்பாளர் பத்பநாபன் அவர்கள் பிரபாகரனி பிணத்தைக் இலங்கை அரசு கைப்பற்றீய பின் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.

எப்படியோ இலங்கை அரசு புலிகளை ஈழத்திலிருந்து அகற்றி விட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்ள்ள தான் வேண்டும். மாவீரனாக இறந்த புலித்தலவருக்கும் மற்றைய புலிகளுக்கும் எமது வீர மரியாதையை செலுத்த கடமைப் பட்டுள்ளோம். "போகும் பாதை தவவென்றால் அதன் முடிவும் தவறாகவே முடியும்" என்பதற்கு புலிகளே எடுத்துக்காட்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள் வேண்டும்.