Thursday, May 21, 2009
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-சுப்பிரமணிய ஸ்வாமி பேட்டி
கேள்வி: சார் நீங்க பிரபாகரன்கிட்ட பேசினதா ச்ல பேர் சொல்றாங்க அது ஊன்மையா?
ஸ்வாமி: "நான் நேற்ற நைட்ட முட்ட தோச நாலு சாப்பிட்டன். சோ, வயிருல ஃபிராபளம் ஆகிடிச்ச. அதனால நைட்டு பன்ரெண்ட மணிக்கு டாக்டரட்ட போன்ல பேசினன், பட் அவருக்கம் சேம் ஃபிராப்ளம், சோ, யின்ன ப்ன்னலனு யோசிச்சே, பட் ஒன்னம் தோன்னல
தென், லைட்ட டூ அவுன்ஸு அடிச்சிட்ட குப்பற படுத்த ட்ரை பன்னினே, பட், தூக்கம் வரல. அப்புறம் அப்பா ஆவிங்ககிட்ட பேச்லாமின்ன பட்த்திய பத்த வச்சு, தீபன் வைச்ச கும்பிட்டன், அட் தட் டைம், நம்போ அப்பா ஆவி தூங்கிடிச்சனு நினைக்கிறன், பிகாஸ் அப்பா ஆவி வரல
தென், நானு ட்ரை பன்னெ, திடேரினு ஒரு ஆவி வந்தீச்சு, நீ யாரனு கேட்டென், சோ, அத சொல்லிச்ச நான் தானு புலத்தலைவன் பிரபாகரன்னு, சம் பயம் வேற இருந்தீச்ச, பட் கன்ரோல பன்னி பேசினேன். அவர சொன்னாரு தானு இறக்கல, பட் மரணம் ஆகிட்டென், பட், இப்ப நான் பழ. நெடுமாறன் பெரியார சொன்ன போல கொரில்ல அட்டாக் பன்ன டிரை பன்ரேன். பியூ டேய்ஸ் நான் கொழம்ப அட்டாக் பன்றத பிளான் பன்னிருக்கன். டோன்ற் சே எனிபடி, னு சொன்னார. சோ, அதனால அவரு இறக்கல அவரோட ஆவி எந்த நேரத்தல வேன்னாலம் சிங்கள ஆர்மிய அட்டாக் பன்லாம்"
கேள்வி: அப்போ நீங்க பிரபாகரன் உயிரோட இருக்கிறத ஏற்றுகிறீங்கலா?
ஸ்வாமி: " நான் என்.வி சாப்பட மாட்டேன், சோ, நான் சொல்ற உண்ம, அவர இறக்கல. பட், மரணம் ஆகிட்டாரு என்பத என்னல சொல்ல முடியும்"
கேள்வி: அவரு மறுபடி வரும் வரைக்கும் யார் புலிக்கு தலைவரின்னு சொன்னாரா?
ஸ்வாமி: நான் கேட்டப்ப, அவர் சொன்னார, டுவன்ரி இயர்ஸ் ஆகும் நான் வர அத வரைக்கும் பாரஸ்ட் அதிகாரிங்க, அல்ல தம்பி சீமான் பாத்திடவாரு, சேம் டைம் தலீவராயும் அவக்க இறப்பாங்க. னு
இவ்வாறு பேட்டியில் அவர் கூறினார்.
Wednesday, May 20, 2009
பிரபாகரனுடன் ஹிப்னாடிஸ முறையில் உரையாடினேன் -பழ.நெடுமாறன்
ஒருசிலர் மட்டுமே ஏற்க மறுக்கிறார்கள். பிரபாகரன் இறக்கவில்லை என்றும், அவர் சாயலில் உள்ள வேறு ஒருவருடைய பிணத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்றும் கூறிவருகிறார்கல்.
ஆனால் இங்கெ இன்று பேட்டி அழித்த ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் கூறுகையில் "பிரபாகரன் நலமாக இருக்கிறார், ஈழத்திலேயே இருக்கிறார், போரை தலமையேற்று நடத்திக்கொண்டு இருக்கிறார் இந்த தகவலை நான் ஹிப்னாடிஸம் என்ற கலையை பயன்படுத்தி அவருடனேயே பேசினேன் என்று தெரிவித்துள்ளார்."
Tuesday, May 19, 2009
கொல்லப்பட்டது புலித் தலைவர் பிரபாகரன் தான்!
பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூட பிரபாகரன் சாகவில்லை என்று அடித்துக் கூறினார். இவர்கள் அனவரும் நம்புவதாலோ, கூறுவதினாலோ உணமை மறைக்கப் பட்டு விடாது என்பது என் கருத்து. இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல.
தமிழ் உணர்வு கொண்ட தமிழன் தான். அவர் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் ஆதாரத்துடன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ,பிரபாகரன் இறந்தற்கான காரணங்கள் பல உண்டு.
1) பிரபாகரன் பிணத்தை முன்னால் பிரபாகரனின் தளபதியும், 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்தவருமாண கருணா அம்மான் அவர்களே உறிதிப் படுத்தியுள்ளார்.(நாம் போட்டோக்களிலும், வீடியோக்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்)
2) ஆரம்ப காலங்களில் பிரபாகரனின் தோழரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி படுத்தியுள்ளார்.
3) இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசங்காமோ போலித்தனமாக உலகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இறக்கவில்லை என்றால் இருப்பிடத்தை சொல்லாமல் பிரபாகரன் வீடியோ பேட்டி கொடுக்கலாம்.
4) புலிகளின் செய்தித் தொடர்பாளர் பத்பநாபன் அவர்கள் பிரபாகரனி பிணத்தைக் இலங்கை அரசு கைப்பற்றீய பின் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.
எப்படியோ இலங்கை அரசு புலிகளை ஈழத்திலிருந்து அகற்றி விட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்ள்ள தான் வேண்டும். மாவீரனாக இறந்த புலித்தலவருக்கும் மற்றைய புலிகளுக்கும் எமது வீர மரியாதையை செலுத்த கடமைப் பட்டுள்ளோம். "போகும் பாதை தவவென்றால் அதன் முடிவும் தவறாகவே முடியும்" என்பதற்கு புலிகளே எடுத்துக்காட்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள் வேண்டும்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.
Thursday, April 16, 2009
நான் சுயநலவாதியா -பிராபாகரன் பற்றிய அலசல் ரிப்போர்ட்!
ஈழ யுத்தத்தில் அழிந்தது என்னவோ அப்பாவித் தமிழர்களே. போர் புரியும் விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு நபரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இறந்து இருக்கிறார்கள். ஆனால் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் பிரபாக்ரன் குடும்பத்தில் யாருமே சாகவில்லை. இது எப்படி? தமிழராகிய நாம் உணர வேண்டும். என்று குட்டிமனி, தங்கத்துரையை கொல்வதற்கு "எட்டப்பன்" வேலை பார்த்தானோ பிரபாகரன் அன்றே ஈழத்தமிழர்களின் விடுதலை போரின் போக்கு மாறி தவறிவிட்டது. எப்போது ஸ்ரீ சபாரத்தினம் என்ற ஈழத்தின் முதல் ஆயுத போராட்ட மாவீரன் பிரபாக்ரனால் கொல்லப் பட்டானே அன்றே ஈழ மக்க்ளின் விடுதலையும் தோல்வி அடைந்து விட்டது
ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்ட அன்றே, கலைஞர் கருணாநிதி அவ்ர்கள் தனது அறிக்கையில் வெளியிட்டார். "ஈழத்தில் சிங்களவர்களுக்கு எதிரான யுத்தம் சகோதர யுத்தமாக மாறி உள்ளது. இந்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாரன். அதற்கு பலிகேடாக தோழர் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீசபாரத்தினம் என்று கொல்லப்பட்டாரோ அன்றே ஈழப் போர் தோல்வியடைந்ததாகவே நான் கருதுகிறேன்"என்று அதிலிருந்து தமிழ் மக்கள் மேல் அனுதபப்படுவார். ஆனால் புலிகளை வெறுத்தார். இதில் அர்த்தம் இருக்கிறது. தங்கள் இஸ்டத்துக்கு எல்லாத்தையுமே செய்து விட்டு தோல்வி என்று வரும் போது. கலைஞரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
பிரபாகரன் ஈழ மக்கள் சுகந்த போராட்டத்தை தனது சுயநலத்துக்காக பயன் படுத்தி தானும் தனது நலம் விரும்பிகள் சிலரும் சேர்ந்து தமிழர்களின் ரத்தத்தில் குளிர் காய்ந்தார்களே தவிர , மக்களுக்காக பாடுபடவில்லை.
இலங்கையில் உள்ள மக்களில் பல லட்சம் பேர் விடுதலைப் புலிகளால் தான் செத்தார்களே தவிர ராணுவத்தால் அல்ல.தற்போது நடக்கும் இறுதிப் போரில் தான் ராணுவத்தால் தமிழர்கள் பெரும் அளவில் அழிக்கப் படுகிறார்கள். அதற்குக் காரணமும் பிரபாக்ரன் தான். மக்களை பணயக் கைதிகளாக வைத்து , ஐ.நா சபையின் இரக்கத்தைப் பெற்று தப்பித்து விடலாம் என்று. அது உலக நாடுகளுக்கு தெரியும்.அதுவும் குறிப்பாக இந்தியாவுக்கு தெரியும். அதனால் தான் மாட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் முழிக்கிறார்.
ரானுவத்தால் மக்கள் அழிகிறார்கள் என்றால், மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரபாக்ரன் மக்களை அனுப்பிவிட்டு சண்டை போட்டிருக்கலாம். அதை செய்யவில்லை,, அல்லது மக்களைக் காக்க சரண்டர் ஆகியிருக்கலாம்.சிங்களவனிடம் சரண்டர் ஆனால் கொல்லுவான் என்றால், இந்தியாவிடம் ஆகியிருக்கலாம்.அதை விட்டு விட்டு, ஈழ மக்கள் அழிந்த பின் ஜெயித்தால் என்ன? தோல்வியடைந்தால் என்ன?
பிரபாகரனைத் தவிர்த்து , ஈழத்தின் அனைத்து அறிவாளிகளும் மேதைகளும் இறந்து விட்டார்கள். இப்போது ஸ்கூல் படிக்கும் சிறுவர்களை வைத்துக் கொண்டு போர் புரியும் பிரபாகரன் போன்ற சுயநல வாதிகளுக்கு உயிரின் வலி எப்படி தெரியும்??? மகனோ, மகளோ அல்லது மனைவியோ இறந்திருந்தால் தெரிந்திருக்கும். அவ்ர்கள் ஏ.சி அறையில் ஈழத் தமிழனின் ஓ.சி பணத்தில் அல்லவா வாழ்கிறார்கள்
சுபாஷ் சந்திரபோஷ்
Friday, March 6, 2009
தேர்தல் களத்தில் 'டெ.....ர்......ர......ர் காமெடியன்கள்' மூன்று பேர்: பயங்கர கொலைவெறி பிரச்சாரம்!
தேர்தலில் ஜெயிப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பதும் நடைமுறை படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள வேளையில். பிரச்சாரம் செய்ய திறமையுள்ளவர்களை பயன் படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த டாப் லெவல் கட்சிகளின் பார்வை சினிமா பக்கம்தான் அதிகமாக உள்ளன. சினிமா நடிகர்கள் என்றால் தான் கூட்டம் கூடும் என்பதால். இந்த தேர்தலில் நடிகர் நடிகைகளை தம் பக்கம் இலுப்பதிலும், விலைக்கு வாங்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றன.அதிலும் கட்சிகள் காமெடி நடிகர்களை களம் இறக்கி விசித்திரமான முறையில் ஓட்டுகளை அள்ள திட்டமிட்டுள்ளதாக தகவால்கள் தெரிவிக்கின்றன.தற்போதைய ட்ரெண்ட்-க்கு ஏற்ற நகைச்சுவை நடிகர்களும் களம் இறங்க கொலைவெறி ஆர்வத்துடன் இருப்பதாக தெரிய வருகிறது.அதிரடியாக களம் இறங்கும் நடிகர்கள்.
1) டெர்..............ர.......................ர் காமெடியன் ரித்தீஷ்
2) பயங்கரமான காமெடியன் T.ராஜேந்திரன்
3) கொலைவெறி காமெடியன் சுந்தர்.C
டெர்..............ர.......................ர் காமெடியன் ரித்தீஷ்:
அதாவது நாயகன் படத்தின் மூலம் உலகம் முழுவதும் டெர்...ர...ர் காமெடியன் என உலா வரும் ரித்தீஷை களத்துல் இறக்க தீர்மானித்துள்ளன. அவருக்கு தேர்தல் புதிதல்ல.ஆனால் அவர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான கெட்டப்பில், பல விசித்தி
ர தோற்றங்களில் கலக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரித்தீஷ் தினம் ஒரு தொகுதி என பிரச்சாரம் செய்வார். அவர் ஒவ்வோரு ஊர்களுக்குச் செல்லும் போதும் விதவிதமான கோமாளி ஆடைகளை அனிந்து 'நாயகன்' படத்தில் உள்ள சில காமெடிகளை மேடையில் நடித்துக் காட்டி வாக்காளர்களை சிரிக்க வைப்பது தான் அவருடை இந்த தேர்தல் பிரச்சார டெக்னிக். இலவச பிரியானி சாப்பிட்டுகொண்டு இந்த நகைச்சுவகளைப் பார்த்து மக்கள் மெய்மறந்து சிரிக்க வைத்து ஓட்டுக்களை அள்ளுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு காமெடியையும் பொறுமையாக் உட்கார்ந்து, பயந்து ஓடாமல் பார்ப்பவர்களுக்கு தலைக்கு 50/= என ரூபாய் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் ரித்தீஷ். கடைசிவரை அனைத்து காமெடிகளையும் பார்ப்பவர்களுக்கு சிறப்புப் பருசுகள் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல தேர்தலில் பிரச்சாரம் பன்னிய அனுபவம் உண்டு. இவர் அதே பானியைத் தான் இந்த தேர்தலிலும் கடைப் பிடிப்பார் என தெரிகிறது. இதுவரை நடந்த தேர்தலில் இவருடைய பிரச்சாரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கில் தான் மக்கள் ஹார்ட் அட்டக்கில் இறந்துள்ளனர். பாதி பேர் தெற்க்கு ஆப்பிரிக்கா காடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அதனால் இவரை விலைக்கு வாங்கி பிரச்சாரத்துக்கு பயண்டுத்த பல கட்சிகள் போட்டி போடுகின்றன , இவரது பிரச்சாரத்தின் ட்ரெண்டை இந்த தேர்தலில் கொடூரமாக
இருக்கும் என் தெரியவருகின்றது. அதாவது இவர் இது வரை தமது ஆதரவு உள்ள கட்சி மேடைகளிலேயே முழங்கி வந்தார். ஆனால் இந்த் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவு அதிகமாக உள்ள தொகுதிகளுகு சென்று எதிக்கட்சியினரின் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக சென்று வீட்டு முன்நின்று காட்டுக் கத்து கத்துவார்.இதனால் பலவீனம் ஆனாவர்கள் கரடி வீட்டுக்குள் வந்து விட்டதாக நினைத்து ஹார் அட்டாக்கில் போய் சேர்ந்து விடுவார்கள். மற்றவர்கள் காடு, மலை என ஓட்டம் பிடித்து விடுவார்கள். இதனால் எதிர் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை கனிசமான முறையில் குறைத்து, ஆதரவு கட்சியை ஜெயிக்க வைப்பது தான் இவரது இந்த தேர்தல் ட்ரெண்ட்.இவரைப் பயன் படுத்தும் கட்சிக்கே வெற்றி அதிகமாக இருக்கும் என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவர் தேர்தல் நடைபெறும் பூத்துக்கு சென்று காட்டுக் கத்து கத்துவார். இதனால் கரடியைப்பார்த்து தேர்தல் அதிகாரிகள், மக்கள் என எல்லோரும் ஓடிவிட ஆதரவு அணி கள்ள ஓட்டுக்களை போட்டு எளிதாக் ஜெயித்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கொலைவெறி காமெடியன் சுந்தர்.C :
புதிதாக முளைத்துள்ள காமெடியன் சுந்தர்.C . இவருக்கு இதுவே முதல் தேர்தல் என்பதால் இவரும் புதிய நுனுக்கத்துடன் தேர்தல் களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளார். இவரைப் பயன்படுத்தும் கட்சி. இவர் 'தீ' படத்தில் ஆக்ட் பன்னிய அனைத்து காமெடிகளையும் (A to Z படம் முழுவதும்) "மூன்றாம் பிறை" கமல் நடிப்பில் வெளிப்படுத்த உள்ளார். இவருடைய பிரச்சாரம் ரித்தீஷ் and T.ராஜேந்திரன் மிக்ஸ் பன்னி இருக்கும் இதனால் சில நேரங்களில் டெ...........ர்.................ர...............
.ர் ஆகவும், சிலநேரங்களில் பயங்கரமான காட்டு........... கா..................மெ.........டியனாகவும். குட்டப் மாறி மாறி, ஒட்டப்பிலும் வந்து காமெடி பன்னி ஆதரவைப் பெறுவது தான் இந்தக் கட்சியின் வேலை. ஒட்டப்பில் வரும் போது பெண்களின் ஓட்டை அள்ளி விடலாம் என நினைக்கிறார்.இவர் தன்னுடன் கூட வந்த ஆதரவு கட்சி வேட்பாளர்களையே சில நேரங்களில் தற்கொலை செய்ய வைக்கும் அளவிற்கு பிரச்சாரம் பன்னுவார் என எதிர்பார்ப்பதால். ஆதரவு கட்சி வேட்பாளர்களே இவர் மேல் கொலைவெறி பயத்தில் உள்ளனர். சில நேரங்களில் ரித்தீஷ் and T.ராஜேந்திரன் கலவையாக ஒரு சிரிப்பு சிரிப்பார். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
(இது யாரையும் புண் படுத்துவதற்க்காக எழுத்தப்பட்டவை அல்ல, சிரித்து மகிழ எழுத்தப்பட்டவை)
Monday, March 2, 2009
Sunday, March 1, 2009
கருவறையிலேயே கல்லறைக்கு செல்லும் கொடுமை!
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். மறக்க முடியுமா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கொள்கைநல்லூர் முத்துக்குமாரை. ஆனால் நடப்பது என்ன. மறந்து விட்டோமே அந்த வீர தமிழ் வாலிபனை. அவன் எடுத்த தவறான அணுகுமுறையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், யாருக்காக அவன் தன் உயிரைத் துறந்தான், தமிழருக்காக, ந்மக்காக. பாதிக்கப்பட்டது அவனது குடும்பம். வாழவேண்டிய வயதிலே ஈழத்தமிழர்களுக்கு விடிவு பிறக்காதா? என ஏங்கி தன் மறைவின் மூலமாது ஆங்காங்கே சிதறக்கிடக்கிற தமிழ் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து போராடி ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கட்டும் என்று தானே உயிர் நீத்தான்.
இன்று நடப்பது என்ன? அவனது இறப்பையே அரசியல் ஆக்கி பணம் சம்பாதித்தார்கள் பல தலைவர்கள். முதலைக்கண்ணீர் வடிக்க மட்டும் தவறவில்லை, தமிழுக்காக எதுவேண்டுமென்றாலும் செய்வேன். தமிழருக்காக் உயிரைக்கூட குடுப்பேன் என்று சொன்ன தலைவர்கள் எல்லாம் ஏ.சி அறையில் உல்லாசமாக வாழ்கிறார்கள்.மேடைப்பேச்சிலே மப்பில் இருப்பதுபோல் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசும் தலைவர்கள் ஆட்சியில் இருந்தும் என்ன செய்தார்காள். பினந்தின்னி கழுகுகழாக மாறி சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழன் ரத்தத்தில் குளிர் காய்கிறது. அதை வேடிக்கைதானெ பார்க்கிறார்கள்.அதிகமாகப் போனான் தேர்தல் அறிக்கை போல் சில அறிக்கைகளை அள்ளி வீசுவார்கள். அறிக்கை வீசும் அந்த ஒவ்வொரு வினாடிய்ம் பல தமிழர்கள் கொல்லப் ப்டுகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை.
தினமும் பல நூறு என் உறவுகள் மடிந்து கொண்டு இருக்கிறது.தமிழர்களின் அழிவிற்க்கு சிங்கள ராணுவம் மட்டும் அல்ல. அவர்களைக் கேடயமாக பயன்படுத்தும் புலிகளும் தான் காரணம்.தவறைத் தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு சிங்கள பத்திரிக்கையாளர்களாக இருந்தபோதிலும் 'வெள்ளை வேன்' முறையில் கடத்திச்செண்று கொலை செய்கிறது. சிங்களப் பத்திரிக்கைத் துறைக்கே இந்த நிலமையென்றால். தமிழ் பத்திரிக்கையை சொல்லவே வேண்டாம். தமிழர்களாக நாம் இருந்தும் நம்மால் முடியவில்லையே என்றென்னும் போதெல்லாம் என் இரத்தம் கொதிக்கிறது. கோழைகளாக வாழ்ந்த நம்மை நம் வீரத்தை வெள்ளையர்களுக்கு காண்பித்த சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த மண்ணில் பிறந்து , நமது இன அழிவுக்கெ நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே??????????
பிஞ்சுக் குழந்தை கருவறையை விட்டு வெளியே வருமுன்னே கல்லறைக்கு போகிறததே இந்தக்கொடுமை எங்காவது நடந்த துண்டா? ஈழ மண்ணில் ஐ. நா தடை விதித்த கிளஸ்டர் குண்டுகளெல்லாம் தமிழினத்தை சுடுகாடு போக முன்னோயே எரித்து சாம்பல் ஆக்குகிறதே. இதையெல்லாம் பார்க்கும் போது. சுகந்திரமும் தேவையில்லை அரசாங்கமும் தேவையில்லை. மன்னர் ஆட்சியே போதும் என்றெல்லவா தோன்றுகிறது.
Friday, February 27, 2009
சபாஷ்.. சரியான ஜோடி! -சிறுகதை
''எஸ் மேடம்.. என்ன வேணும்..?''
''இங்க குமார்னு.. யார் அது?''
'அட, என்னிடம் வந்து என்னையே கேட்கும் எனக்கு அறிமுகமில்லாத அழகே.. அதி அழகே..' மனம் விசிலடிக்க, சட்டென சுதாரித்த குமார் அப்பாவியாய், ''எந்த குமார்? இனிஷியல் என்ன? ஆனா, இன்னிக்கு ரெண்டு குமாரும் வரலை'' என்றான்.
சட்டென அவள் முகம் மாறியது.
''இங்கதான் அவர் வேலை செய்றதா சொன்னாங்க. அவர் அப்பா பேர் சுப்ரமணியன். அம்மா பேர் தெய்வானை. ஊர் ஈரோடு..''
'ஆகா.. அது நானேதான். ஏன் இவள் என்னைப் பற்றி விசாரிக்கிறாள்' - அவன் நினைக்கும்போதே அவள் பதில் சொன்னாள்.
''அவரை எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. ஆபீஸ்ல அவரைப்பத்தி விசாரிக்கலாம்னுதான்..'' - அவள் சொல்லச் சொல்ல, குமாரின் மனம் கழுத்து வரை துள்ளியது. ஆனாலும் வெளிக்காட்டவில்லை.
''வந்தது வந்துட்டீங்க.. கரெக்டா லன்ச் டயம் வேற.. எங்க கேன்டீன் வாங்களேன் சாப்பாடு சூப்பரா இருக்கும்'' - மெள்ள இருக்கை விட்டெழுந்தான்.
''ம்ம்ம்..'' - அவளும் எழுந்தாள
''பொதுவா இப்படி விசாரிக்கறதுக்கெல்லாம் பெரியவங்கதானே வருவாங்க..?''
''இல்ல.. எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை நானே விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்.. தப்பா?''
''தப்பில்ல.. இருந்தாலும் இப்பல்லாம் பொண்ணுங்க நீங்க கொஞ்சம் ஓவராதான் போறீங்க..'' இவன் சொல்லவும்,
''சரி சரி, குமார்.. அதாவது எஸ்.குமார், உங்களைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவர்?'' என்றாள் அவள்.
'குமாரிடமே குமாரைப் பற்றியா?'
''ப்ச்.. உங்களோட ஒப்பிட்டா குமார் கொஞ்சம் சுமார்தான். உங்களைவிட உயரம்.. உங்களுக்கேத்த கலர் இருப்பான். ஆனா, உங்க அளவுக்கு..'' - அவன் இழுக்கவும்
அவள் ஆர்வமானாள்.
''ம்ம் சொல்லுங்க.. ஏதாவது பழக்கங்கள்..?''
'த்தோ பார்டா..' மனதுக்குள் நினைத்தவன், ''உங்க அளவுக்கு தைரியசாலி இல்லைனு நினைக்கிறேன்.''
''ரொம்பவும் ஃப்ரெண்டுக்காகப் பரிஞ்சுப் பேசறீங்க. நீங்களும் அவரும் ரொம்ப தோஸ்த்தா?''
''ச்சேச்சே அவன் நல்லப் பையன். ரொம்ப நல்லவங்கக் கூட எல்லாம் நான் சேர்றதில்லைப்பா.''
''ம்ம்.. அப்போ நீங்க ரொம்பக் கெட்டவரோ?''
''ஹலோ மேடம்.. நீங்க குமாரதானே பொண்ணு பார்க்க, ஸாரி மாப்பிள்ளை பார்க்க வந்தீங்க? என்னைப் பத்தி ஏன் விசாரிக்கிறீங்க? ஒருவேளை எங்க ஆபீஸ்ல எங்களுக்கே தெரியாம, சுயவரம் வச்சி உங்களை உள்ளே விட்டுட்டாங்களா?''
சட்டென முகத்தை அவன் காணா வண்ணம் திருப்பிக் கொண்டாள். (அடக்க முடியாமல் வந்த சிரிப்பை மறைக்கத்தான்!)
கேன்டீன் வந்ததும் நடையும் பேச்சும் தடைபட, நல்ல இருக்கையைத் தேர்ந்தெடுத்து அவளை அமர வைத்தான்.
''உங்களுக்கு என்னப் பிடிக்கும்..? இங்கே சாம்பார், வத்தக்குழம்பு எல்லாமே நல்லா இருக்கும். நீங்க என்ன சாப்பிடப் போறீங்களோ அதையே கொண்டு வரச் சொல்லுங்க.''
அவள் கை கழுவும் இடத்துக்குச் சென்றாள்.
'அப்பா.. எவ்வளவு துணிவுள்ள பெண்! ஆனால், நல்ல அழகு. யார் மூலம் இவள் வீட்டுக்கு என் ஜாதகம் கிடைத்திருக்கும்?'
பார்த்துப் பார்த்து அவளை சாப்பிட வைத்தான் குமார். இடையிடையே அவள் பெற்றோர், அவளின் குணங்கள், படிப்பு, வேலை பார்க்கும் அலுவலகம் என அனைத்தையும் அவளே சொன்னாள். வெகு நாட்கள் பழகிய தோழமையை அரைமணி நேரத்தில் இருவரும் உணர்ந்தனர்.
முதலில் அவன் உணவை முடித்து கை கழுவிவிட்டு வந்தான். அவள் அவனிடத்தில் தன் சிறிய கைப்பையைக் கொடுத்து விட்டு, கை கழுவ சென்றாள். கைப்பையின் ஜிப் திறந்தே இருப்பதை கவனித்துவிட்டு ஜிப்பை மூடும் போது ஏதோ ஒன்று தடுக்க, தடுத்த அந்தப் பொருளை.. ஆம் அந்தப் புகைப்படத்தை கவனித்தான்.
அது.. அட, அது அவனுடையப் புகைப்படமேதான்! அவசர அவசரமாக வெளியே எடுத்துப் பார்த்து புகைப்படத்தின் பின்புறம் திருப்ப, தெள்ளத் தெளிவாக அவன் தாயாரின் கையெழுத்தில் அவன் பெயர், அவன் தந்தைப் பெயருடன் எழுதப்பட்டு இருந்தது.
Wednesday, February 25, 2009
வலைதளத்தில் பெண்களுக்கு வலை?!
புரிந்திருக்குமே... கைது செய்யப்பட்ட ராமச் சந்திரனின் தாத்தா எம்.ஜி.ராமச்சந்திரன்! முன்னாள் தமிழக முதல்வர், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்!
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந் திரனின் மூத்த மகன்தான் இந்த
ராமச்சந்திரன். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான இவரின் பொழுதுபோக்கே திருமணத்துக்குப் பெண் தேடுவதுதான். இவருடைய செயல்முறை பற்றி போலீஸ் வட்டாரத்தில் சொல்வது இதைத் தான் -
''இணையதளங்களில் 'மணமகள் தேவை' என விளம்பரம் கொடுப்பார். குறிப்பாக, கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மணமாகாத நடுத்தரப் பெண்கள்தான் ராமச்சந்திரனின் இலக்கு! அதிலும் சர்வதேச நிறுவனங்களில் வேலை பார்க்கும் 'எக்ஸிக்யூடிவ்'கள்தான் ராமச் சந்திரனின் முன்னுரிமை! 'வசதியான குடும்பத்தில் பிறந்தவன், சாதி எதுவானாலும் பரவாயில்லை. கைநிறைய சம்பாதிப்பவன்' என தன்னைப் பற்றி சுயஅறிமுகம் செய்து இணையதளத்தில் ராமச்சந்திரன் விரித்த 'திருமண வலை'யில் அடுத்தடுத்துப் பெண்கள் சிக்கினார்கள். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் பெண்கள்...
அவர்களுடன் முதலில் 'சாட்டிங்' நட்பு வளர்க்கும் ராமச்சந்திரன் அடுத்து அவர்களைத் தேடிப் போவார். சில நாட்கள் அவர்களுடன் தங்குவார். 'அவசரமாக வந்து விட்டேன்... போதுமான அளவுக்கு பணம் எடுத்து வரவில்லை' எனச் சொல்லி கடன் வாங்கிக் கொள்வார். அவர்களுடைய கிரெடிட் கார்டுகளையும் அபேஸ் செய்து அதிலிருந்து பணம் எடுத்துச் செலவு செய்வார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பி, பழையபடியே 'மணமகள் தேவை' விளம்பர வித்தையைக் கையிலெடுத்து ஏமாற்றுத் தொழிலைத் தொடருவார். இப்படித்தான் கடந்த வருடம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ராமச்சந்திரனின் வலையில் விழுந்திருக்கிறார். வழக்கமான சாட்டிங், மீட்டிங் என அவர்கள் நட்பு இறுக, ராமச்சந்திரனோடு சில நாட்கள் ஹைதராபாத்தில் தனியாகத் தங்கி 'அனைத்தையும்' இழந்திருக்கிறார் ரம்யா. ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியில் புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முப்பத்தைந்து வயதான ரம்யா பலமுறை தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு ராமச்சந்திரனைக் கெஞ்சியிருக்கிறார். ஒரு கட்டத்தில் 'போலீஸ§க்குப் போவேன்' என்றும் சொல்லவும்தான், ராமச்சந்திரனிடமிருந்து மிரட்டல் கிளம்பியிருக்கிறது. ரம்யாவின் அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதாசிகள் படையெடுக்க, கடந்த 19-ம் தேதி ஹைதராபாத் போலீஸின் சென்ட்ரல் க்ரைம் பிராஞ்சில் புகார் கொடுத்தார் ரம்யா. அடுத்த நாளே சென்னை தி.நகர் தண்டபாணி தெருவில் வசித்துவந்த ராமச்சந்திரனை ஆந்திர போலீஸ் அள்ளிக்கொண்டு போனது. இந்த விஷயம் வெளியில் தெரியவர... பெங்களூரு, ஹைதராபாத் திலிருந்து பல பெண்கள் ராமச் சந்திரனுக்கு எதிரான புகார் மனுக்களோடு படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்!'' என்கி றார்கள் நம்மூர் போலீஸார்.
ராமச்சந்திரனை முதலில் விசாரித்த துணை ஆணையர் பிரவீண்குமாருக்கு ராமச்சந்திரன் எம்.ஜி.ஆரின் பேரன்முறை என்று தெரிந்ததுமே ஆடிப் போய்விட்டாராம். இந்த விஷயத்தை அறிந்ததும் ஆந்திர அரசியல் வி.ஐ.பி-க்கள் சிலர் தலையிட்டு விவகாரத்தை சுமுகமாக முடித்து வைக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், ராமச்சந்திரன் மீது தொடர்ந்து புகார்கள் வருவ தால் மேற்கொண்டு என்ன செய்வதென்று விழிக்கிறதாம் ஆந்திர போலீஸ்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். விசுவாசிகள் ரொம்பவே அப்செட்டானார்கள். நாம் அப்பு குடும்பத்தினரைத் தொடர்புகொண்டோம். பேச மறுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். குடும்ப நலவிரும்பிகள் சிலரிடம் பேசினோம். ''அப்புவுக்கு மூன்று மகன்கள். ராமச்சந்திரன்தான் மூத்த மகன். எம்.ஜி.ஆரின் நினைவாக முதல் பையனுக்கு அவர் பெயரையே வைத்தார் அப்பு என்கிற ரவீந்திரன். ஆனால், மகனோ தன் பெயரில் அப்பாவின் பெயரையும் தாத்தாவின் பெயரையும் சேர்த்து ரவீந்திரன் ராமச்சந்திரன் என வைத்துக்கொண்டார். சிறு வயதில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன் படிப்பதில் மக்கர் செய்ய, டெல்லியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார் அப்பு. பட்டப் படிப்பையும் பாதியில் நிறுத்திய ராமச்சந்திரனுக்கு, ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் தடபுடலாகத் திருமணம் நடந்தது.
கேரளாவில் பாரம்பரியம் மிக்க குடும்பத்துப் பெண்ணை மணந்துகொண்ட ராமச்சந்திரனுக்கு, வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது ஓரிரு ஆண்டுகளில் தெரியவந்தது. அதனால் குடும்பத்தில் பிரச்னைகள் வெடித்து, ராமச்சந்திரனின் மனைவி தன் மகனைத் தூக்கிக்கொண்டு தாய்வீட்டுக்கே போய்விட்டார். அதன் பிறகுதான் ராமச்சந்திரனின் வாழ்க்கை திசைமாறத் தொடங்கியது. பல பிரச்னைகளில் சிக்கினார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டார் என்ற விவகாரத்தில் சிக்கிய ராமச்சந்திரன் மீது இன்னும்கூட வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், அனைத்தையும் கடந்து ராமச்சந்திரனின் அம்மா நிர்மலா எப்படியாவது மகனையும் மருமகளையும் சேர்த்து வைத்து, அவர்களுக்குப் புது வாழ்க்கை அமைத்துத் தரப் போராடிக்கொண்டிருக்கிறார். நிர்மலாவின் முயற்சிகளுக்குப் பலன் தரும் வகையில் ராமச்சந்திரனின் மனைவி யும் கணவரோடு சேர்ந்து வாழ சம்மதித்திருந்தார்.
இந்நிலையில், ராமச்சந்திரனின் ஆறு வயது மகனுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் சொல்லவே, அந்தக் குடும்பம் ஆடிப்போனது. எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராமச் சந்திரனோ இப்படியரு 'நல்ல பெயரை' குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்!'' என்று சொன்னார்கள்.
''ஏற்கெனவே, எம்.ஜி.ஆர். தோட்டத்து விஜயன் கொலையில் சிக்கினார் விஜயனின் உறவுக்காரப் பெண்மணி பானு. உடனே, எம்.ஜி.ஆர். பெயரைக் குறிப்பிட்டு அந்த விவகாரத்தைப் பரபரப்பாக்கியது மீடியா. இப்போது ராமச்சந்திரன் ஏமாற்று வழக்கில் சிக்கியிருக்கிறார். இது எந்தளவுக்கு எம்.ஜி.ஆர். குடும்பப் பெயருக்கு பாதகம் செய்யப் போகி றதோ...'' என்று சொல்லி வருந்துகிறார்கள் எம்.ஜி.ஆர். குடும்ப வாரிசுகள் சிலர்.
Monday, February 23, 2009
'பிளாஸ்டிக் கல்' கண்டுபிடித்த இளம் விஞ்ஞானி!

--இது திரைப்படப் பாடல். இதில் 'அன்னை' என்ற இடத்தில் ஆசிரியை என்ற வார்த்தையை இட்டு நிரப்பினால், அதுவே எட்டாம் வகுப்பு படிக்கும் ராபின் ஜெரால்டு இளம் விஞ்ஞானி ஆன வரலாறு!
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள நெய்வாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் ராபின் ஜெரால்டு, இன்று இளம் விஞ்ஞானியாக... பல தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். உலகில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கும் பிளாஸ்டிக்கை, அதன் கேடுகளைத் தவிர்த்துக் கட்டுமானப் பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காகத்தான் இத்தனை பாராட்டுகளும்... விருதுகளும்!ஜெரால்டின் பால பருவம் பல துயரங் களைக் கடந்தது என்கிறார்கள் அவனுடைய சக மாணவர்கள்.
''அவனுக்கு எட்டு வயதானபோதே, அவன் தந்தை கொலை செய்யப்பட்டார். அதற்கு தாய்தான் காரணம் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னான் ஜெரால்டு. அதனால் தாயைப் பிரிந்து பாட்டியின் ஆதரவிலேயே இன்று வரை வாழ்கிறான். அன்பு கிடைக்காத சூழ்நிலையால் முரட்டுத்தனம் நிறைந்தவனாக வளர்ந்த ஜெரால்டு, பாதி நாட்கள் பள்ளிக்கே போகமாட்டான். போனாலும், ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் சண்டை போட்டுவிட்டு வீடு திரும்பிவிடுவான். இப்படி யெல்லாம் இருந்தவன்தான்... இன்று கட்டடங்கள் கட்டும் செங்கல், சிமென்ட் கல், ஹாலோபிளாக் கல் போன்று பிளாஸ்டிக்கை பயன்படுத்தி கல் உருவாக்கி இருக்கிறான்.
வெறும் மணலை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வறுத்த பிறகு, அதில் பிளாஸ்டிக் குப்பைகளைப் போட்டு நன்கு சூடுபடுத்தி அதில் கிடைக்கும் மெழுகை, செங்கல் அச்சில் வார்த்தெடுத்து கல் தயாரிக்கிறான். அந்தக் கல்லை காரைக்கால் மாவட்டம், புதுவை மாநிலம் மற்றும் தென்னிந்திய அளவில் நடந்த அறிவியல் கண்காட்சிகளில் காட்சிக்கு வைத்த பிறகுதான், ஜெரால்டின் கண்டுபிடிப்பு வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்தது. இந்தக் கண்காட்சிகளில் அவன் கண்டுபிடிப்புக்குப் பல சிறப்புப் பரிசுகளும் கிடைத்தன. அடுத்ததாக, ஆசிய அளவில் நாகாலாந்தில் நடைபெற இருக்கும் அறிவியல் போட்டிக்கும் இவன் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார் கள்,
காரைக்கால் பகுதியில் கட்டுமான பணியில் இருக்கும் பொறியாளர்கள். அவனுடைய இந்த சாதனைக்கு காரண கர்த்தா அவனுடைய ஆசிரியை வைஜெயந்தி ராஜன்தான்!'' என ஜெரால்டின் வேதனை முதல் சாதனை வரை விவரித்தனர் சக மாணவர்கள்.
வைஜெயந்தி ராஜனை சந்தித்தோம். ''எட்டாம் வகுப்புக்குப் போனால், அந்த முரட்டுப்பையன் ராபின் ஜெரால்டுகிட்ட கொஞ்சம் ஜாக்கி ரதையாநடந்துக்கங்கன்னு எல்லாரும் சொல்வாங்க. அவங்க சொல்ற மாதிரி அவனும் அப்படித்தான் இருப்பான். தானும் படிக்க மாட்டான், படிக்கிற பையனுங்களையும் கெடுத்துடுவான். சொன்ன பேச்சையும் கேட்க மாட்டான். அப்புறம்தான் அவனோட குடும்பச் சூழ்நிலைய விசாரிச்சுத் தெரிஞ்சு கிட்டேன். அதுதான் அவனோட நடத்தைக்குக் காரணம்னு புரிஞ்சது.
அதுக்குப்பிறகு அவன்கிட்ட ரொம்ப அன்பாவும் ஆதரவாவும் நடக்க ஆரம்பிச்சேன். அதற்கு நல்ல பலன் தெரிய ஆரம்பிச்சது. எல்லாரையும் இமிடேட் பண்ணி... அவங்க மாதிரியே பேசி காமிப்பான். அதையே நல்லா பயிற்சி கொடுத்து மிமிக்ரியா மாத்தினோம். சாலமன் பாப்பையாவுடன் பட்டி மன்றங்களில் நான் பேசுவேன். அப்படி ஒரு தரம் போகும்போது, இவனையும் அழைச் சுக்கிட்டு போனேன். அவன் அவரை மாதிரியே பேசினது அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போய், சால்வை போட்டுப் பாராட்டி, நூறு ரூபாய் பரிசும் கொடுத்தாரு. அதுதான் இவனுக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு. அப்பதான், 'நாம ஏதாவது உருப்படியா செஞ்சா... பெரிய பெரிய மனுஷங்கள்லாம் நம்மைப் பாராட்டு வாங்க' என்ற நினைப்பு அவனுக்குள் விதையா விழுந்திருக்கு. அதனால் ஏதாவது சாதிக் கணும்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டான். அறிவியல் பாடம் எது நடத்தினாலும் ஆசிரியர் பாலகிருஷ்ணன்கிட்ட 'அதுல இப்படி செஞ்சா என்ன? அப்படி செஞ்சா என்ன?' என்று கேள்விகள் கேட்டுக்கிட்டேயிருப்பான்.
இவனுடைய ஆர்வத்தைப் பார்த்த அவரும், அலுவலக ஊழியர் வரதராஜனும், 'இந்த பிளாஸ்டிக்தான் உலகத்துக்குப் பெரும் தொல்லையா மாறிக்கிட்டு இருக்கு. அதுக்கு எதாவது பண்ண முடியுமா பார்'னு இவன் கிட்ட சொல்லியிருக்காங்க. அதையே வேத வாக்கா எடுத்துக்கிட்டு இப்ப 'பிளாஸ்டிக் கல்'லை உருவாக்கியிருக்கான்! அன்னைக்கு மிமிக்ரிக்குக்கு கிடைச்ச பாராட்டுல விழுந்த விதை, இன்னைக்கு அவனை பிளாஸ்டிக் மூலமா ஒரு சாதனையாளரா மாத்தியிருக்கு!'' என்று மூச்சுவிடாமல் தன் மாணவனின் சாதனை வரலாற்றை எடுத்துச் சொன்னார்.
இந்தப் புகழுரைகள் எதுவும் பாதிக்காத வண்ணம் விளையாடிக் கொண்டிருக்கிறான் ராபின் ஜெரால்டு.
''எல்லாத்துக்கும் எங்க டீச்சர்தான் காரணம். இன்னமும் நிறைய சாதிக்கணும்.வெள்ளம், புயல் சமயங்கள்ல அதை முன் கூட்டியே உணர்ந்து, மக்களுக்கு எச்சரிக்கை செய்றதுக்கு ஏதா வது கண்டுபிடிக்கணும்... கடின நீரை மென்னீராக்க ஏதாவது செய் யணும்... அந்நிய ஆட்கள் வீட்டுக்குள் வந்தால், அவர்களின் அதிர்வுகளை வைத்து எச்சரிக்கை செய்றதுக்கு, கருவி கண்டுபிடிக்கணும். இப்படி சமுதா யத்துக்கு எவ்வளவோ கண்டுபிடிக்கணும் சார்!'' என்று கண்கள் மின்னச் சொல்கிறான், இந்த இளம் விஞ்ஞானி.
''ஜெரால்டு இப்படி சாதனையாளனாக மாறியது, எங்க ஸ்கூலுக்குப் பெருமை. அவனு டைய சாதனைகள் தொடர நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்!'' என்கிறார், பள்ளி யின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை வைஜெயந்தி ராஜன், தலித் கிறிஸ்துவ வகுப்பைச் சேர்ந்த ராபின் ஜெரால்டை தன்னுடைய வீட்டிலேயே வைத்து வளர்த்து வருகிறார்.
'பள்ளியில் மினிமம். டியூஷனில் மேக்ஸிமம்' என பாடம் நடத்தும் பல ஆசிரியர்களுக்கு மத்தியில் வைஜெயந்தி ராஜன் போன்ற வர்களும் இருப்பதால்தான்... அப்துல் கலாம் களும், மயில்சாமி அண்ணாதுரைகளும், ஜெரால்டுகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
Saturday, February 21, 2009
பேய், சாமி வருவது உண்மையா?
ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!
அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?
சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்! பின்பு இனிப்பு ஏங்கே?
இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!
இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!
சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!
பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!
சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?
மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!
ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,
ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்! என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா... யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!
இதைத்தவிர,
மாரியாத்தா, காளியாத்தா, பச்சையம்மா, சுடலை மாடன், சவுடம்மா, தொட்டம்மா, காட்டேரி, ரத்தக் காட்டேரி, பில்லலு காட்டேரி இப்படி பல பல பெயர் களைக்கூறி ஆடுவதைப் பார்த்திருக்கிறோம்.
இந்த ஆட்டங்களின் போது, சிலர் மற்றவர்களுக்கு நடந்த, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சித்தரிக்கின்றனர். (ஓரிரு வரிகள் மட்டும்). அதை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சம்மதமாக தோன்றும் போது சரியாகிவிடுகிறது. அதாவது கடந்த காலத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள் என கூறுகிறோம்.
சிலர் ஆட்டங்களின்போது, மற்றவர்களை அதிகப்படியாய் துன்புறுத்து வதைப் பார்க்கிறோம். குறிப்பாக பளார் என அறைவது, ஹும்.. பேசாதே! நான் சொல்வதைச் செய் எனக்கூறி.. வேப்பிலை வைத்து ஆடுவதையும், சில நேரங்களில் தன்னைத்தானே வருத்திக் கொள்வதையும் கீறிக்கொள்வதையும், கத்திகையில் ஏந்திக்கொண்டு ஆடுவதையும் கண்டிருக்கிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சிலர் ஆடும்போது நன்மை ஏற்படுகிறது, சிலர் ஆடும்போது தீமை (காயம்) ஏற்படுகிறது. இதை வைத்தே மக்கள் நல்ல பேய், கெட்ட பேய் என வகைப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
இந்த நம்பிக்கையில்.. ஆதிவாசியி லிருந்து அல்ட்ரா மாடர்ன் மனிதன் வரை அடக்கம். இங்கே கல்விக்கு, பணத்திற்கு, பட்டத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்கு, ஜாதிக்கு மதத்திற்கு என்று வித்தியாசம் கிடையாது.எல்லா மதங்களிலும் இந்த பேய் அல்லது ஆவி போன்றவற்றின் ஆதிக்கம் அதிக அளவில் ஆளுகை செய்கிறது.
கிறித்தவ மதத்தில், கோயில்களில் ஆராதனை நடக்கும்போதே சில பெண்கள் உளர ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்து- ஜெபித்து அடக்குவதைப் பார்த்திருக்கிறோம்.இதை அசுத்த ஆவி என்கின்றனர்.
முஸ்லீம் நண்பர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தொழுகை செய்யும் பள்ளியிலோ, அல்லது வேறு கூடும் இடங்களிலோ அவர்களுக்கு இதுபோன்று ஆவி வந்து ஆடுவது கிடையாது. ஆனா லும் சில பெண்கள் அல்லது ஆண்கள் வழக்கத்திற்கு மாறாக சேஷடைகள் செய்தால் அவைகளும் அவர்கள் இமாம் அல்லது அசரத் என்ற குருக்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் ஊதி கட்டுப்படுத்துகிறார்கள் (வாய் மூலம் ஊதி அல்லது ஓதி) நல்ல ஆவியை நல்ல ஜானி என்றும், கெட்ட ஆவியை கெட்ட ஜானி என்றும் இவர்கள் அழைக்கிறார்கள்.
ஆக, மொத்தத்தில் அனைத்து மதத்தினரும் பேய், அசுத்த ஆவி அல்லது ஜானி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. இது நடைமுறை!
PART-II
கெட்ட ஆவி என்று ஒன்று இருந்தால் நல்ல ஆவி என்று இருக்க வேண்டுமல்லவா?
அது எங்கே இருக்கிறது? இது நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டால் தெரியும்! எங்கே? சற்றே சிந்தியுங்கள் பார்க்கலாம்!
கெட்ட ஆவியை படிக்க சுடு காட்டுக்குப் போகவேண்டும் என்றால், நல்ல ஆவியை பிடிக்க வாழும் நாட்டுக்குள் வரவேண்டும். சுடுகாட்டில் கிடைப்பது இறந்தவர் சடலம். வாழும் நாட்டில் கிடைப்பது ஜாவிப்பவரின் உடல்.
இப்போது இவற்றின் வித்தியாசம் என்ன என்று சற்றே உள்நோக்கு வோமா?
இறந்தவர் உடலின் உள்ளேயும், கண் மூக்கு, வாய், இதயம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது ஜாவனுடன் இருப்பவரின் உட லிலும் அதே கண், மூக்கு, வாய், இதயம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது. இவற்றில் என்ன இல்லை? என்பதுதான் கேள்வி! அசைவு இல்லை, சலனம் இல்லை.
துடிப்பு இல்லை, நடிப்பும் இல்லை. ஊக்கமும் இல்லை, ஆக்கமும் இல்லை. மொத்தத்தில் எதுவும் இல்லை.
அப்படியெனில் இந்நாள் வரை இத்துணை இயக்கங் களையும், நடத்தல், மூச்சு விடுதல், பேசுதல், படுத்தல், இச்சை அல்லது அனிச்சை செயல்கள்- போன்றவற்றை செயல்படுத்த நமது உடலில் எங்கும் வியாபித்திருக்கும் ஆவி ஒன்று இருந் திருக்க வேண்டும் ! அதுதான் ஜாவ ஆவி அல்லது நல்ல ஆவி அல்லது பரிசுத்த ஆவி! இந்த ஆவி நல்ல விதமான ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தால் நமக்கு உதவும் ஆவிதான்.
இது நமக்கு எதிராக அல்லது வித்தியாசமாக அல்லது வழக்கத்திற்கு மாறாக செயல்படும்போது அது கெட்ட ஆவி, வேண்டாத ஆவி, அச்சுறுத்தும் ஆவி (இறுதியில் பேய்) என பெயர் பெறுகிறது. இந்த நல்ல ஆவியின் ஆரோக்கிய நிலை சீர் கெட்டுப்போனால், .... கெட்டுப்போய்விடுகிறது? எதினால் சீர் கெடுகிறது?..
பல நோயினால் இருக்கலாம்!
பல சந்தேகங்களினால் இருக்கலாம்!
பல சூழ்நிலைகளினால் இருக்கலாம் அல்லவா?
உங்கள் மனம் இதற்கு என்ன சொல்கிறது? இது வெறும் அறிவுப்பூர்வமான கேள்வி மட்டும்தானே! இந்த விளக்கம் நல்ல ஆவிக்கும் கெட்ட ஆவிக்கும்; உள்ள வித்தியாசத்தை மட்டுமே தரும் (தத்துவம்) ஆக, மொத்தம் ஒவ்வோர் உடலிலும் ஆவி ஒன்று (ஜாவ ஆவி) உலாவிக் கொண்டிருக்கிறது. உயிருள்ள வரையில் என்பது தெரிகிறது.
நமது வாழ்க்கை நிகழ்ச்சிகளை, நாம் மறக்க சில காலம் தேவைப்படுகிறது. அதுவரை இறந்தவர்களின் நினைவு வருகிறது. அவ்வளவுதான்.
மாறாக, சிலர் ஒருநாள், நான் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு இருந்தேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்குப்போட்டு இறந்து போனாள் அதன் பிறகு இரவில் தினமும் ச்சல்..ச்சல் என்ற சத்தம் வருகிறது.. அஹாஹா.. என சிரிப்பது, வா..வா.. என அழைப்பது போன்ற ஒலியை கேட்டேன் எனவும் கூறுகின்றனர்.
காரணம், அந்த வீட்டில் போய் படுக்கும்போதே, ஏற்கனவே ஒரு பெண் தூக்குப்போட்டு இறந்தது ஞாபகத்தில் இருக்கும். ஒருவர் மறந்து தூங்கினாலும் அவரின் ஆழ்மனதில் உள்ளே மறைந்து ஒளிந்திருக்கும் பய, அபய குரல் கத்தின கத்து, கூக்குரல் போன்றவை மீண்டும் முன் சுயநினைவுக்கு வந்து, கனவில் தோன்றி.. பாடாய் படுத்திவிடும். இதைத்தான் பேய் வந்து கூப்பிட்டது என்று கூறுகிறோம்.
சற்று மாறாக, யோசித்துப் பார்ப்போமா?
கனவில் வந்தது ஓர் அழகிய பெண், வெள்ளை சேலை உடுத்தி தலை முடியை நீண்ட தூரமாய் பறக்கவிட்டு, உங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதைப் போல கனவு கண்டாலோ அல்லது பகல் கனவில் திளைத்துப்போனாலோ- அதை பேய் என்று கூறாமல் மோகினி என்று கூறுகிறார்கள்.
இன்னும் கிராமப்புறங்களில் பெண்கள் ஆடினால் பேய் என்றும், ஆண்கள் ஆடினால் முனீஸ்வரன் என்றும், ரத்த வாந்தி எடுத்தால் காட்டேரி என்றும், அதிகளவி மாதவிலக்குத் தோன்றினால் ரத்தக் காட்டேரி என்றும், ஒருவன் தன் மனைவியை விட்டு மாறிமாறி மற்ற பெண்களுடன் அதிகளவு தொடர்பு கொண்டுவந்தால் மோகினி பிசாசு என்றும், கருச்சிதைவு ஏற்பட்டால் பில்லலு காட்டேரி பிடித்திருக்கிறது என்றும், நீல நிறமாக மாறும் குழந் தைகள் அல்லது பெரியவர்களாய் இருப்பின் நாகாத்தம்மா, நாகராஜா போன்ற பேய் பிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இயற்கையான மரணத்திற்குப் பிறகு யாரும் பேயாக உலவுவதாக கூறுவதில்லை. ஆனால் துர்மரணம், அகால மரணம், தூக்கு, நீரில் மூழ்கி இறத்தல், கழுத்தை நெரித்து அல்லது அறுத்து, குத்தி, அடித்து கொலை செய்தல், தற்கொலை செய்துகொள்ளல், மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லுதல், ரயில் தண்ட வாளங்களில் தற்கொலை, விஷ மருந்து சாப்பிட்டு இறத்தல் போன்ற பல்வேறு யுக்திகளை கையாளுகிறவர்கள் இறந்த பின்னர் மட்டுமே பேய் பிசாசு போன்ற பேச்சே வருகிறது. காரணம், பயத்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக அலைக் கழிக்கப்படுகின்றனர். நிஜத்தில் பேய் என்று ஒன்றும் இல்லை. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பார்கள்.
மனம் பயந்து போனால் பேயுமாகலாம்! இதனால்தான் மிரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்று!
-ஒரு பெண் கோயிலுக்குச் சென்றவுடன் ஆடு வதைக்கண்டால்.. அவளுக்கு கற்ர ஆராதனை காட்டி அடக்குவது வழக்கம். காரணம் கற்ரத்தில் உள்ள காம்பா என்ற ரசாயனப் பொருள் அவளின் மூளை செல்லை தூண்டிவிட்டு, பின்பு சரிசெய்கிறது. இது வெறும் ஹிஸ்டீரியா என்று சொல்லப்படுகிற நிலை மட்டுமே!
இந்த ஹிஸ்டீரியா, ரத்த சோகை உள்ள ஆண்- பெண் இருவருக்கும் வரலாம். ஆனால் பெண்களுக்கு அதிகம். ரத்தப் போக்கு என்பது மாதவிலக்கின்போது வெளியாகும். அளவு அதிகமானால் பேய் பிடித்து ஆடுபவர்கள் போல செய்யலாம். அல்லது உளறுவது அல்லது அதிக கோபப்படுவது அல்லது பொருட்களை தூக்கி எறிவது அல்லது தன் குழந்தையைகூட அளவுக்கு மீறி அடிப்பது போன்றவை தோன்றலாம்.
மன விரக்தியினால், கணவனை இழந்ததினால், அல்லது நெருங்கிய உறவினர்கள் இறந்ததினால், நண்பர்களின் மரணம், அல்லது காதல் தோல்வி போன்றவற்றுக்குப் பிறகும் ஏற்படலாம். இவற்றுக்கு எல்லாம் தீர்வு உண்டு. இது விஞ்ஞான காலம்- அஞ்ஞானத்துக்கு இடம் கொடுக்காமல்- மெய்ஞானத்தை அறிந்து கொள்ளல் அவசியம்.
அடுத்து சிலர் குறி சொல்கிறார்களே, நான் தஞ்சாவூரிலிருந்து வருகிறேன், ஆனால் வேலூர் பாலாற்றங்கரையிலே இதைப் பற்றி கரெக்டாக சொல்கிறார்களே எப்படி எனக் கேட்கலாம்!
சிலருக்கு சற்றே ஈ எஸ். பி. மைண்ட் உள்ளது எனக் கூறுகிறார்கள். இதற்கு எக்ஸ்ட்ரா சென்சேஷன் பர்செப்ஷன் என்று பெயர். பொதுவாக குறி கேட்க வருபவர்கள் ஒரே வகையான மனோநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறியில் நம்பிக்கை உடையவர்கள் தாம்.
குறி சொல்பவர்கள் அடுக்கடுக்காக கூறும்பல அறிகுறிகளில் இவர்களுக்கு சரியாக உள்ளதை இவர்களே டிக் அடித்துக் கொள்கிறார்கள்.
அவ்வளவுதான்.சாமி ஆடுதல் என்பது அதிகளவு உணர்ச்சி வசப்படுதல் மட்டுமே! அது வேறுவேறு நிலைகளில் அமைகிறது.
சிலர் பயங்கரமாக மற்றவர்களை அடிப்பது, கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுவது, அழிக்கும் நோக்கத்துடன் ஆடுபவர்களை கேரளாவில் உள்ள சொட்டாணிக்காரா என்ற இடத்திலுள்ள பகவதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள சுவற்றில் பேய் பிடித்தவரின் கைகளை வைத்து ஆணி அடித்து விடுவது வழக்கம். பின்பு அவர்கள் தெளீவு பெறுவதும்- பேய் விட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர்.
இது முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை-எனக்கூறலாம். அழிக்கும் குண முடைய பேயை ஒரு சடன் ஷாக்ட்ரிட்மெண்ட் கொடுப்பதன் மூலம் (ஆணி அடித்தல்) வேகமான மென்டல் வைப்ரே ஷன்ஸ் உண்டாகிற சரிசெய்வது ஆகும்.
ஒரு பெண், மூன்று முறை சரியாக மூன்றாம் மாதத்தில் கருச்சிதைவுக்கு ஆளாகிறாள் என்றால், அவளுக்கு பில்லலு காட்டேரி பிடித்திருக்கு- அதை ஓட்டினல்தான் கருதரிக்கும் என்று கூறுவது மடத்தனம்.
மூன்று முறை தொடர்ந்து அபார்ஷன் ஆனால் அது தொடர் அபார்ஷன் என்று பெயர். தைராய்டு போன்ற சுரப்பிகள் மற்றும் ஒவேரியன் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் இதுபோன்ற கருச்சிதைவு தோன்றுவது வழக்கம்.
சரியான காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்தால், பில்லலு காட்டேரி ஓடியே போய்விடும்!
மாதவிலக்கின்போது பெண்களுக்கு சில சமயம் கட்டுப்படுத்த முடியாத அளவு உதிரப்போக்கு தோன்றுமாயின் அது கர்ப்பப்பை கட்டியின் காரணமாகவோ, நீர்ம கட்டியின் காரணமாகவோ இருக்கலாமே தவிர, ரத்தக்காட்டேரிதான் காரணம் என எப்படி சொல்ல முடியும்.
குழந்தை பிறந்தவுடன் பெண்களின் உடம்பில் 75% சக்தி உடனடியாக குறைந்துவிடுகிறது. அது சில மாதங்களில் படிப்படியாக தேற்றப்படுகிறது. இந்த நிலையில் அவள் மனம் (கணவனால்- உறவினரால்- மாமனார்-மாமியார் போன்றவர்களால்) நல்ல மகிழ்ச்சியான நிலையில் இல்லாமல் இருக்குமானால் அந்நேரங்களில் ஹிஸ்டீரியா போன்ற அறிகுறிகள் தோன்றும்.
அப்போது நான் எங்கே இருக்கேன்! நீ யார்? என்று கணவனைப் பார்த்துக் கேட்பது போன்றவை தோன்றும். இதை பெர்ப்பியூரல்மேனியா என்றே கூறுகிறார்கள்.
இப்படி பெண்களின் வாழ்க்கையில் பல கால கட்டங்களில் இவர்கள் ரத்தத்தை இழந்து, ஹிஸ்டீரியா போன்ற நிலைக்கு தள்ளப்படுவதினால், பெண்களுக்கு மட்டுமே பேய் பிடிக்கிறது என்ற பட்டப் பெயரையும் கொடுத்துவிடுகிறார்கள். (ஆண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்)
சில ஆண்கள் குழந்தைகளை அடிப்பதும், உதைப்பதும் (கண்டிப்பு என்ற பெயரில்) கட்டி வைத்து அடிப்பதும்கூட ஆண் ஹிஸ்டீரியாதான்.
மனைவியின் ரத்தத்தை ஊசியில் இழுத்து, பிராந்தியில் குடித்ததாக ஆண்களின் கதைகளைப் படிக்கிறோம். இது ஆண் பேயில்லையா? பேய் வாங்கி பிசாசுகிட்டே கொடுத்தேன் என்பார்கள். அப்படியானால் பேயை பிடித்துக் கொண்டு வருபவர்கள் யார்?
இனியாவது பெண்கள் பேய் பிடித்து ஆடுகிறார்கள் என்று சொல்லாமல் அவர்கள் ஆடுவதற்கான உண்மையான காரணத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வோமா?
அன்புடன்
கொள்ளிவாய் கொடுவாயன்
Friday, February 13, 2009
காதலர்களே காதலில் உங்கள் குணம் எப்படி?
காதலில் உங்கள் குணம் எப்படி?ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}
எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.
எண் ஒன்று - ஆணுக்குரிய குணம்மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.
எண் இரண்டு - பெண்ணுக்குரிய குணம்கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.
எண் இரண்டு - ஆணுக்குரிய குணம்நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.
எண் மூன்று - பெண்ணுக்குரிய குணம்ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள். அழகுகூட இரண்டாம் பட்சம்தான். நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள். வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.
எண் மூன்று - ஆணுக்குரிய குணம்ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.
எண் நான்கு - பெண்ணுக்குரிய குணம்உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.
எண் நான்கு - ஆணுக்குரிய குணம்குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர். உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர். பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர். உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எண் ஐந்து - பெண்ணுக்குரிய குணம்பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.
எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!
எண் ஆறு - பெண்ணுக்குரிய குணம்குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர். என் கணவர், என் கு்ழந்தைகள்தான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள். அது அது எங்கு இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். ஓர் ஆசாதார மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .
எண் ஆறு - ஆணுக்குரிய குணம்காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.
எண் ஏழு - பெண்ணுக்குரிய குணம்உடுப்பது, உண்பது, பேசுவது, காதலிப்பது எல்லாமே ஏனோ தானோதான். பணம், பதவி, பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்.... சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள். எந்த ஒரு விஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள். வெளிவேஷம் போடத்தெரியாதவர்.
எண் ஏழு - ஆணுக்குரிய குணம்சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்த்து.
எண் எட்டு - பெண்ணுக்குரிய குணம்கலை பொருந்திய, கவர்ச்சி நிரம்பிய முகம். முதல் சந்திப்பில் நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் பழகுவதாக மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள். இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள்; அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.
எண் எட்டு - ஆணுக்குரிய குணம்நல்ல தாம்பத்தியத்துக்கு இடையூராக இருப்பது உங்களின் பொறாமைக் குணம்தான். சமூக அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள், சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும், தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும், சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்திடுவீர்கள். நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும், புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித் திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.
எண் ஒன்பது - பெண்ணுக்குரிய குணம்உங்களுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் என்று உங்கள் கணவர் கூறும் அளவுக்கு நீங்கள் அன்பும் காதலும் மிக்கவர்.
எண் ஒன்பது - ஆணுக்குரிய குணம்எறும்பின் சுறுசுறுப்போடும், லட்சியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள். எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம் பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடி கட்டிப் பறக்கலாம்.
Thursday, January 29, 2009
தீயில் எரிந்து இறந்த தமிழன் முத்துக்குமார்.........................
வலி....................... தாங்கமுடியவில்லை, பொறுத்துப் பொறுத்து பார்த்தும் பலனில்லை. பொங்கு எழுந்து ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிதும் பயன்படவில்லை. ஆனால் ஈழத்தமிழன் தாய் நாட்டிலேயே சிங்கள அரசின் கொடுமையான பல்முனைத் தாக்குதலில் கை, கால், உடல், உயிர் என இழந்து துடித்துக் கொண்டிருக்கிறான்.பிறந்த சிறு குழந்தை முதல் அனைத்து ஈழத்தமிழ் மக்களும் இலங்கை அரசின் வெறித்தனமான வான் வெளித்தாக்குதலுக்கு தமது உயிரை இழந்து அழுது புலம்பும் ஓலம் கேட்டு இங்கே நம் இதயம்வலிக்கிறது.
டி.வி சேனலைத் திருப்பினால் இலங்கைச் செய்தி, பிணக்குவியல்கள், பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது. தமிழனாகப் பிறந்தது பாவமா? இதைப் பார்த்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என எண்ணி தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை காங்கிரஸ் அலுவலகம் முன்னிலயே தன் உடலிலேயே பெட்ரோல் ஊற்றி தீயில் எரிந்து பரிதாபமான நிலையில் இன்று காலை இறந்தார். ஒரு தமிழனிக்கு வலியென்றால் மற்ரொரு தமிழனுக்கு வலிப்பது இயல்பு தானே. ஆனால் இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சுய அரசியல் லாபத்துக்காக இலங்கைப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள். இப்படியே போனால் இலங்கையில் போரி முடியும் போது தமிழர்களைப் பார்ப்பதே அரிதாகிவிடும்.
விடுதைல்ப்புலிகள் தீரவாத இயக்கம் தான் அதை இந்தியர் நாம் அனைவரும் மறுக்க முடியது. அதற்கான தண்டனையை நாம் கொடுத்தே தீர வேண்டும். அதற்காக ஒட்டுமொத்த தமிழர்கள் அழிவதைப் பார்த்துக்கொண்டு நாம் சும்ம இருக்க முடியாது.இலங்கை அரசாங்கத்தையும் விடுதைலைப் புலிகளையும் தராசில் போட்டால் சமமாகத்தான் இருப்பார்கள்.ஆனால் அழிவது நமது இரத்தம் அல்லவா? இதற்கு என்ன செய்யவேண்டும் தமிழனாக இருந்து என் கருத்தைத்ச் சொல்கிறேன். என்னதான் இருந்தாலும் ராஜபக்ஷே என்ன வாக்குறுதி கொடுத்தாலும் இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்கையும் அழித்தெ தான் தீரும் . போர் முனையில் மாட்டிக்கொண்ட தமிழர்களில் குறைந்தது 75 சதவிகிதம் மக்களையாவது ராணுவம் அழித்து விடும். அதன் பின் மீதம் உள்ளவர்கள் உறவினர்களை இழந்து அனாதையாக இருந்து என்ன பயன்.
நமது அரசு என்ன செய்யவேண்டும், போர் முனையில் அகப்பட்டுத் தவிக்கும் மக்களை இந்திய அரசே தலையிட்டு நமது துருப்புக்களை அனுப்பி அத்தனை மக்களையும் காப்பாற்றி இரணுவ கட்டுப்பாட்டுக்குள் இந்திய அரசே பாதுகாப்புக் கொடுக்கவேண்டும். புலிகளும், ராணுவமும் பழைய பண்டைய காலத்து யுத்தைத்தைப்போல் மக்கல் இல்லாத இடத்தி போர் இட்டு மடியெட்டும் அதை பற்றி நாம் கவலிப்ப்டக் கூடாது. ஏனென்றால் நமது அப்படியில்லாமல் பிரனாப் முகர்ஜி- போல் வாக்குறிதி வாங்கிவிட்டென் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் வேலைக்காகாது. மக்கள் நிலவரத்தை பற்றி அறிவதற்காக இலங்கை செல்வதாக இருந்த முகர்ஜி சென்றதும் தெரியவில்லை திரும்பி வந்ததும் தெரியவில்லை. மின்னல் வேகத்தில் போய் 10 நிமிடத்தி தமிழர்களையெல்லாம் பார்த்து விட்டு சூறாவளி வேகத்தில் வந்து விட்டார்கள்.
ஆனால் ராஜபக்ஷே அறிவித்தார் தமிழர்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால். புரட்சித்தலவி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இலங்கை வந்து மக்களிடம் கேட்கலாம் என்று. ஆனால் நம்து முதல்வர் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.இப்படியே கண்டுகொள்ளாமல் போனதல் தான் இன்று முத்துக்குமார் என்ற தமிழனை இழந்திருக்கிறோம். இதற்கு மேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் தமிழர்களின் வலியைக் குறைக்க முடியாது. அதிகரித்துக் கொண்டே இருக்கும்
உங்களில் ஒருவன்
சுபாஷ்